1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. PUBG Madhans bank account blocked

ரூ 4 கோடி க்ளோஸ்: பப்ஜி மதன் வங்கிக்கணக்கு முடக்கம்!

PUBG Madhan
ஆன்லைன் விளையாட்டுகளை யூட்யூபில் ஒளிபரப்புவது மற்றும் யூட்யூப் சேனலில் பல வீடியோக்களை வெளியிடுவது என யூட்யூப் பிரபலமாக இருப்பவர் மதன். தனது யூட்யூப் சேனலிலும், ஆன்லைன் விளையாட்டின்போது மதன் தொடர்ந்து பெண்களை கொச்சையான வார்த்தைகளால் பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இதுகுறித்து விசாரணைக்கு மதனை போலீசார் அழைத்த நிலையில் அவர் தலைமறைவானார். இதனால் அவரது மனைவி கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். இந்நிலையில் மதனின் சொகுசு கார் மற்றும் சொத்துக்களை முடக்கியதுடன், மதனை தேடும் பணியையும் போலீஸார் முடுக்கிவிட்டிருந்தனர். இந்நிலையில் தருமபுரியில் தலைமறைவாக இருந்த மதனை இன்று போலீஸார் கைது செய்தனர்.
 
பப்ஜி மதன் கைதான நிலையில் அவரிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஆபாசமாக பேசி பல கோடி ரூபாயை சம்பாதித்த 'பப்ஜி' மதன் அவரது மனைவியின் பெயரில்  ரூ.4 கோடி வாங்கி கணக்கில் வைத்துள்ளார். தற்போது  மதன்-மனைவி கிருத்திகாவின் கணக்கை சைபர் கிரைம் போலீசார் முடக்கியுள்ளனர். 
அடுத்த கட்டுரையில்
காவலர்களுக்கு ஊக்கத்தொகை… தமிழ்நாடு அரசு 58.6 கோடி ரூபாய் ஒதுக்கீடு!