புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 18 ஜூன் 2021 (07:40 IST)

பப்ஜி மதனை தேடி வருகிறோம்: போலீசார் பேட்டி

பப்ஜி மதனை தேடி வருகிறோம்: போலீசார் பேட்டி
பப்ஜி விளையாட்டை யூடியுப் மூலம் சிறுவர் சிறுமியர்களுக்கு கற்றுக் கொடுப்பதோடு அவர்களிடம் பாலியல் அத்துமீறல்களும் செய்ததாகவும், அவர்களிடம் இருந்து ஏராளமான பணத்தை வசூலித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு பப்ஜி மகனை போலீசார் தேடி வருகின்றனர். சமீபத்தில் ல் அவருடைய மனைவி கிருத்திகாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தலைமறைவாக உள்ள பப்ஜி மதனை தேடி வருகிறோம் என காவல்துறை சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். யூடியூபே மதனை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இருப்பதாக கூறியுள்ள சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் யூடியூப் பப்ஜி மதனின் மனைவி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவருடன் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார் 
 
இந்தநிலையில் பப்ஜி மதன் சரணடைய விருப்பம் தெரிவித்ததாகவும் அவர் இன்று அல்லது நாளை சரணடைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது