திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 14 மே 2020 (11:28 IST)

ஊரடங்கு முடிந்தாலும் போராட்டத்துக்கு தடை! – கறார் காட்டும் சென்னை!

சென்னையில் ஊரடங்கு முடிந்தாலும் கூட்டம் கூடுவது, போராட்டம் செய்வது போன்றவற்றிற்கு தடை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மூன்று கட்டங்களாக தொடர்ந்த ஊரடங்கு மே 17 உடன் முடிவடையும் சூழலில் சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் நான்காம் கட்டமாக வேறுபட்ட ஊரடங்கு செயல்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

சென்னையில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கூட்டம் கூடுதல், பேரணி, உண்ணாவிரதம், மனித சங்கிலி போன்ற போராட்டங்களை நடத்துவதற்கு தடை உள்ளது. மே 17க்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மேற்கண்ட போராட்டங்களுக்கான தடை தொடரும் என கூறப்பட்டுள்ளது. மே 28 வரை மேலும் 15 நாட்களுக்கு சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்திலும் இந்த தடை தொடர்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.