செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 14 மே 2020 (09:31 IST)

இதென்னடா தேவதைக்கு வந்த சோதனை... பாடிக்கொண்டே துணி துவைக்கும் ரித்திகா சிங் - வீடியோ!

இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக தமிழ் மற்றும் இந்தி ரசிகர்களைக் கவர்ந்த ரித்திகா சிங் அந்த படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’, லாரன்சுடன் ‘சிவலிங்கா’ போன்ற படத்தில் நடித்த அவர்  தமிழ், தெலுங்கி , ஹிந்தி என ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

கடைசியாக இவரது நடிப்பில் வெளியான "ஓ மை கடவுளே" பிளாக் பஸ்டர் ஹிட் அடித்ததுடன் இந்த படம் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம்,  மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து  தமிழில் அரவிந்த் சாமியின் ‘வணங்காமுடி’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நிஜ குத்து சண்டை வீராங்கனையான இவர் தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள மெருக்கேற்றி வருகிறார்.

இந்நிலையில்  தற்போது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் பிரபலங்கள் பலரும் வீட்டு வேலையாட்கள் இல்லாததால் வீட்டை கூடுதல், தோட்ட வேலை செய்தல் , சமையல் செய்வது என தாங்களே தங்களது வேலைகளை செய்து வருகின்றனர். அந்தகையில் ரித்திகா சிங் துணி துவைக்கும் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். பாட்டு பாடிக்கொண்டே ப்ரோட்டா மாஸ்டர் போல் துணிவைக்கும் அவரது ஸ்டைல் இணையத்தில் வைரலாகி வருகிறது.