1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 25 ஜூன் 2021 (11:22 IST)

கோவில்களை திறக்க கோரி இந்து முன்னணியினர் நூதன போராட்டம்

தமிழகம் முழுவதும் பக்தர்கள் வழிபட கோயில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

 
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் பல்வேறு துறைகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக இந்து அறநிலையத்துறையிலும் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவில் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவு செய்தல், அனைவருக்கும் அர்ச்சகர் பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மூடப்பட்ட கோயில்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில்,  தமிழகம் முழுவதும் பக்தர்கள் வழிபட கோயில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, ஸ்ரீவில்லிபுத்தூர். உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் தலைகீழாக நின்றும், ராமேஸ்வரத்தில் கற்பூரம் ஏற்றி தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.