திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 24 ஜூன் 2021 (18:29 IST)

செல்வராகவன் படத்துக்கு தனுஷ் தேதி ஒதுக்கக் காரணம் இவர்கள்தானாம்!

தனுஷ் நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில்  உருவாகவுள்ள நானே வருவேன் என்ற படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. தனுஷ் செல்வராகவன் கூட்டணி  8 ஆண்டுகளுக்குப் பின் இணைந்துள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் மூலமாக நீண்ட காலத்துக்கு பிறகு செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அரவிந்த் கிருஷ்ணா ஆகிய மூவர் கூட்டணி இணைந்துள்ளது.

இப்போது அமெரிக்காவில் இருக்கும் தனுஷ் இந்தியா திரும்பியதும், நானே வருவேன் திரைப்படத்தில்தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனுஷ் சேகர் கம்முளா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதனால் செல்வராகவன் படத்தை டீலில் விட்டு விட்டாரோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அமெரிக்காவில் இருந்து வந்த அவர் குடும்பத்தினர் நடத்திய குடும்ப சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக செல்வராகவன் படத்துக்கு தேதிகள் ஒதுக்க அழுத்தம் கொடுத்தாக சொல்லப்படுகிறது. இதையடுத்தே ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் நானே வருவேன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.