1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 14 ஜூன் 2021 (07:14 IST)

ரூ.98ஐ நெருங்கிய பெட்ரோல் விலை: இன்றைய விலை என்ன?

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பதும் பெட்ரோல் விலை ரூபாய் ரூ.100ஐ நெருங்கிவிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
அது மட்டுமின்றி கொடைக்கானலில் பெட்ரோல் விலை 100 தாண்டி விட்டது என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாகும். இந்த நிலையில் இன்றும் சென்னையில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பின்படி இன்று காலை சென்னையில் பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து இன்றைய பெட்ரோல் விலை 97.69 என விற்பனையாகிறது. 
 
இதேபோல் இன்று டீசல் விலை 28 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.91.92 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.