ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் உயர்வு
வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணத்தை உயர்த்த அனுமதி அளித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏடிஎம் களில் வாடிக்கையாளர்கள் கூடுதலாகப் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் இலவசப் பரிவர்த்தனைகளுக்கு மேல் ஒவ்வொரு முறையும் பணம் எடுக்கும் போது வசூலிக்க வேண்டிய தொகை ரூ.21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்கள் ஏடிம்களில் 5 முறை இலவசமாகப் பணம் எடுக்கலாம் இதற்கு மேல் ஒவ்வொருமுறையும் பணம் எடுக்கும்போது ரூ20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
வரும் 2022 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் 5 முறை இலவசமாக பணம் எடுக்கும் முறைக்குப் பின் ஒவ்வொருமுறை பணம் எடுக்கும்போது ரூ.21 வசூலிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.