1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2023 (21:39 IST)

கொடுக்கப்பட்ட பட்டாக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்- ஈசன் முருகேசன்

farmer
மக்களின் உரிமை பெற்ற இனாம் நிலங்களை கோயில் நிலங்களாக கருதிய அறநிலையத்துறையினரை கண்டித்து புகளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு போராட்டம் - தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என  ஈசன் முருகேசன் பேட்டிளித்துள்ளார்.
 
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள புகழிமலை முருகன் கோவில் சுற்றுவட்டாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்து வருகிறது. இதில் திருக்கோயில் சொந்தமாக ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. நிலத்தில் வாழ்ந்து வரும் பொதுமக்களிடமிருந்து நிலங்களை அறநிலையத்துறை சார்பில் மீட்டு வருகின்றனர்.
 
இந்து சமய அறநிலை துறையும் வக்பு போர்டு வாரியமும் மக்களிடம் இருந்து நிலங்களை பறிக்கும் சட்டத்திற்கு விரோதமான செயல்களை செய்து வருவதாகவும்,
 
நிலங்கள் வைத்திருக்கும் மக்களின் பட்டாக்களில் உள்ள பெயர்களை நீக்கி கோவில் பெயர்களை சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும் மக்களிடம் உள்ள இனாம் நிலங்கள் மற்றும் மானிய நிலங்கள் குத்தகைதாரர் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும்,
 
மேலும் இந்த பகுதியில் சுமார் 40 முதல் 50 வருடங்களுக்கு மேலாக முறையாக பத்திரப்பதிவு மறுப்பதிவு செய்தும் கட்டுமான அனுமதிகள் பெற்று மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு,சாலை வசதிகள் அரசின் மூலம் பெற்று முறையாக அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தியும் நிலங்களை உரிமையாக வந்த பிறகு முறையாக அனுபவித்து வருவதாகவும்,
 
ஆனால் இந்து சமய அறநிலைத்துறை இந்த நிலங்களை எந்தவித ஆவணங்களும் கொடுக்காமல் கோவில் நிலங்கள் என்று சொல்லி இந்த நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த மானிய நிலங்கள் அனைத்தும் இனாம் ஒழிப்புச் சட்டத்தின் மூலம் மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் உரிமையாக்கப்பட்ட நிலங்கள் இந்த நிலங்கள் அனைத்தும் மக்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று புகலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வட்டாசியர் அலுவலகத்தை முன்பு முற்றுகையிட்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர்  வழக்கறிஞர் ஈசன் முருகேசன்: தமிழ்நாடு முழுவதும் 12 லட்சம் ஏக்கர் 50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக அரசு சட்ட திருத்தம் மேற்கொண்டு விடுபட்ட மக்களுக்கு  பட்டா வழங்கியுள்ளது அதேபோல் தமிழ்நாடு அரசு உரிய சட்ட திருத்தத்தை கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கொடுக்கப்பட்ட பட்டாக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், நில உரிமை பட்டா வழங்க வேண்டும் இதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழக முழுவதும் அனைவரையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.
 
பேட்டி: ஈசன் முருகேசன், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர்.