செவ்வாய், 5 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2023 (20:30 IST)

அதிமுகவில் இணையும் பிரபல பாஜக நிர்வாகிகள்?

தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். அவர் தற்போது கோவையில்  ''என் மண் என் மக்கள்'' என்ற பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுபற்றி அதிமுக அறிக்கை வெளியிட்டதால் அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால், பாஜக தலைவர்கள் இதுபற்றி  கருத்து கூறவில்லை

இந்த நிலையில், பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரனின் சகோதரர் வீர பெருமாள் மற்றும் தென்காசி முன்னாள் எம்பி வசந்தி முருகேசன்  அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகிறது.