ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 8 மே 2018 (22:38 IST)

விஷால் சகோதரர் கொலையா? தற்கொலையா? புதிய திருப்பம்

இன்று மதியம் நடிகர் விஷாலின் ஒன்றுவிட்ட சகோதரர் பார்கவ் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவருடைய இழப்பு தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் விஷால் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் பார்கவ் மரணம் மர்மமான முறையில் நடந்துள்ளதாகவும், இது கொலையா?: தற்கொலையா? அல்லது விபத்தா? என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
 
பிரபல தயாரிப்பாளர் கோபால் ரெட்டியின் மகனான பார்கவ், நெல்லூர் அருகேயுள்ள கடற்கரைக்கு நேற்றிரவு சென்றிருந்ததாகவும், ஆனால் அவர் வெகுநேரம் திரும்பவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த அவர் தங்கியிருந்த விடுதியினர் உடனே அவருடைய பெற்றோருக்கு தகவல் அளித்ததாகவும், பெற்றோர் வந்து பார்த்தபோது, பார்கவ் உடல் கடற்கரையில் கரை ஒதுங்கியிருந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே இது தற்போது வரை மர்ம மரணமாகவே கருதப்படுவதாகவும், விசாரணைக்கு பின்னரே அவருடைய இறப்பிற்கு என்ன காரணம் என்று தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.