1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 8 மே 2018 (11:10 IST)

திருமணமான 10 நாளில் மனைவியை சுட்டுக் கொன்ற கொடூரன்

திருமணமான 10 நாட்களிலே கணவன் தன் மனைவியை சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரவிகாந்த். இவரது மனைவி பிங்கி. இவர்களுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
 
இந்நிலையில் ரவிகாந்த், பிங்கி குடும்பத்தாரிடம் 20 லட்சம் வரதட்சணையாக வாங்கியுள்ளார். பிங்கியிடம் மேலும் 15 லட்சம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார் ரவிகாந்த். இதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ரவிகாந்த பிங்கியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளான்.
இதனையடுத்து போலீஸாருக்கு போன் செய்த ரவிகாந்த், தனது மனைவியை மர்ம நபர்கள் யாரோ சுட்டுக் கொன்றுவிட்டனர் எனக் கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் பிங்கியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரவிகாந்த மீது சந்தேகமடைந்த போலீசார், அவனிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் வரதட்சணைக்காக மனைவியை சுட்டுக் கொன்றதை ரவிகாந்த ஒப்புக்கொண்டான். போலீஸார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.