செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 8 மே 2018 (09:15 IST)

மணல் திருட்டு விவகாரம் - காவலர் கொலை வழக்கில் 2 பேர் கைது

நெல்லையில் மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற காவலர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் மணல் திருட்டு என்பது அரசியல்வாதிகளின் ஒத்துழைப்போடு சகஜமாக நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் நேற்று அதிகாலை நெல்லை மாவட்டத்தில் உள்ள பரப்பாடி என்ற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் காவல் நிலைய தனிபிரிவு காவலர் ஜெகதீசன் துரை என்பவரை மணல் கொள்ளையர்கள் வெட்டி கொலை செய்தனர்
 
நம்பியாற்றில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றிவந்த டிராக்டரை ஜெகதீசன் வழிமறித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் ஜெகதீஷை வெட்டி கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதனையடுத்து ஜெகதீசன் கொலை குறித்து உடனடியாக போலீஸார் விசாரணையில் இறங்கினர். மணல் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸார், அதன் உரிமையாளரான மாடசாமி என்பவரை கைது செய்தனர்.
 
மணல் அள்ளிச்சென்ற கிருஷ்ணன்(50), முருகபெருமாள்(21)ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீஸார் முக்கிய குற்றவாளியான முருகன் என்பவனை தேடி வருவதாகவும், கொலையாளிகள் அனைவரையும் விரைவில் கைது செய்வோம் எனவும் தெரிவித்துள்ளனர்.