தொடர்புடைய செய்திகள்
- உங்களை யாராலும் தாண்ட முடியாது, நீங்க அவ்வளவு பவர் பல்ப்! வைகோவை கலாய்த்த எஸ்வி சேகர்
- ’உண்டியல்கள் பத்திரமுங்கோ... போலி பக்தர்கள் வர்றாங்க...’ஸ்டாலினை கிண்டலடித்த தமிழிசை
- பாஜக - அதிமுக கூட்டணிக்கு பின் ஜெயலலிதா ஆவி: திகில் கிளப்பும் உதயகுமார்
- பெங்களூர் தொகுதியில் பிரகாஷ் ராஜ்… - ஆதரவு அளிக்க காங்கிரஸ் புது நிபந்தனை !
- எத்தனைத் தொகுதிகள் ? எந்தெந்த தொகுதிகள் ?- இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பு !
தமிழிசைக்கு சீட் இல்லையாம்... தொண்ட தண்ணி வத்த கத்துனது எல்லாம் வீணா?
அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது இந்த ஐந்து தொகுதிகள் யார் யாருக்கு வழங்கப்படும் என்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
பாஜகவில் பல முக்கிய தலைவர்கள் இருப்பதால் யாருக்கு வாய்ப்பு அளிப்பது, யாருக்கு வாய்ப்பு அளிக்காமல் இருப்பது என்ற கேள்வியும், விவாதமும் கட்சிக்குள் உருவாகியுள்ளது.
எச்.ராஜாவிற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவுவதால் எச்.ராஜாவிற்கு வாய்ப்பளிக்க கூடாது என்று பாஜகவின் சில தரப்பினர் கூறியதாக செய்திகள் வருகிறது. அதேபோல் ராஜா தரப்பினர் தமிழிசை வாய்ப்பு அளிக்க கூடாது என குரல் எழுந்துள்ளது.
இந்த பிரச்சனை இதோடு முடியாமல் நீடிக்கும் என்றும் தெரிகிறது. இந்த விவகாரம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் குறித்து ஏதும் வெளியாக நிலையில், இந்த பிரச்சனையை முடித்து வைக்க அமித்ஷாவின் தலையீடு இருக்கும் என கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
