வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 20 பிப்ரவரி 2019 (20:04 IST)

உங்களை யாராலும் தாண்ட முடியாது, நீங்க அவ்வளவு பவர் பல்ப்! வைகோவை கலாய்த்த எஸ்வி சேகர்

திமுக கூட்டணியில் வைகோவின் மதிமுக இருப்பதே இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அப்படியே இருந்தாலும் ஒன்றோ அல்லது இரண்டு தொகுதிகளோ கிடைக்கும். இதற்காக வைகோ பேசும் பேச்சு வாங்கின காசுக்கு மேல் நடிக்கும் நடிகரை போல் உள்ளதாக ஏற்கனவே நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகிய இரு கட்சிகளும் இணைந்துவிட்டது குறித்து கருத்து கூறிய வைகோ, 'அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்  என்று கூறினார்.
 
வைகோவின் இந்த கருத்து குறித்து நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் 'பிரச்சினைகளைக்கூட தாண்டிடலாம். கூடவே இருக்கிற உங்களைத்தாண்டவே முடியாத பவர் பல்ப் நீங்க' என்று கலாய்த்துள்ளார்,. 
 
ஆனால் இதே வைகோவின் மதிமுக கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த போது எஸ்.வி.சேகர் வரவேற்றார்  என்பது குறிப்பிடத்தக்கது