வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 21 பிப்ரவரி 2019 (13:42 IST)

கள்ளக்காதலிக்காக கள்ளக்காதலர்களுக்கிடையே கலவரம்: கடைசியில் நடந்த களோபரம்

வேலூர் மாவட்டத்தில் கள்ளக்காதல் பிரச்சனையில் நபர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள ஏ.கே.மோட்டூரை சேர்ந்தவர் முருகேஷ்வரி. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், முருகேஷ்வரி பழனி என்ற நபருடன் பழகி வந்தார். இவர்களது பழக்கம், கள்ளக்காதலாக மாறி இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
 
நாளடைவில் பழனியை கழட்டிவிட்ட முருகேஷ்வரி, சிவகுமார் என்ற நபருடன் பழக ஆரம்பித்தார். இதனை அறிந்த பழனி, முருகேஷ்வரியையும், சிவகுமாரையும் கொல்ல திட்டமிட்டார். அதன்படி அடியாட்களை ஏவி தனியாக வண்டியில் சென்று கொண்டிருந்த சிவகுமாரை கொலை செய்தார்.
 
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள பழனியை தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்காதல் மோகத்தால் ஏற்பட்ட இந்த விபரீத சம்பவம் அப்பகுதியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.