புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 20 பிப்ரவரி 2019 (16:43 IST)

எனக்கு 20 உனக்கு 40; வயதை மீறிய கள்ளக்காதல்: கடைசியில் நடந்த விபரீதம்

விழுப்புரத்தில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
விழுப்புரம் மாவட்டம் நடுப்பாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மலர். இவருக்கு திருமணமாகி இரு மகள்கள் உள்ளனர். இவரது கணவர் பார்வையற்றவர் ஆவார்.
 
இந்நிலையில் மலருக்கு சென்னையை சேர்ந்த 20 வயது வாஇபரான ஆனந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இவர்களின் பழக்கம் கள்ளக்காதலாக மாறி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
 
இந்த விஷயம் ஆனந்தின்  குடும்பத்திற்கு தெரியவரவே அவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சற்று காலம் ஆனந்த் மலரிடம் பேசாமல் இருந்துள்ளார். கள்ளக்காதலனின் பிரிவை தாங்க முடியாத, மலர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
 
கள்ளக்காதலி இறந்த செய்தியை கேட்ட ஆனந்த், அவள் இல்லாத உலகத்தில் நானும் வாழ மாட்டேன் என கூறி அவரும் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.