திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 25 மார்ச் 2021 (16:48 IST)

நடிகர் விஜய்வசந்துக்காக பிரச்சாரத்திற்கு வரும் பிரியங்கா காந்தி!

தமிழகம் இதுவரை பல தேர்தல்களில் சந்தித்து இருந்தாலும் இதுவரை காங்கிரஸ் கட்சியின் சார்பில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மட்டுமே பிரச்சாரத்திற்கு வந்துள்ளனர். இந்த நிலையில் முதல் முறையாக பிரியங்கா காந்தி தமிழகத்திற்கு பிரச்சாரம் செய்ய வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் சட்டமன்ற தேர்தலுடன் நடைபெற உள்ள நிலையில் அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகர் விஜய் வசந்த் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மார்ச் 27ஆம் தேதி பிரியங்கா காந்தி கன்னியாகுமரி வரவிருப்பதாகவு, அங்கு நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் அவர் பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் பிரியங்கா காந்தியின் வருகைக்குப் பின் மாற்றம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்