பல்லியா? பாம்பா? ஆவேசமான ஈபிஎஸ்-க்கு அழகிரி பதிலடி!!
பதவி என்பது தகுதியால் பெறவேண்டும் என காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி.
கடலூரில் பேசிய முதல்வர் எடப்பாடி நான் ஊர்ந்து சென்று பதவி வாங்கவில்லை என்று பேசியுள்ளார் என காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது,
பதவியை ஊர்ந்து சென்றோ, நடந்து சென்றோ வாங்க கூடாது. பதவி என்பது தகுதியால் பெறவேண்டும். அதிமுகவினர் நாங்குநேரி இடைத்தேர்தலில் , ஒவ்வொரு தெரு முனையில் இருந்து கொண்டு பணம் பட்டுவாடா செய்தார்கள்.நான் கண்ணால் பார்த்தேன். அது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக செயல்படுகிறது. தேர்தல் புகார்களை கண்டுகொள்ளவில்லை. அரசியலுக்காக மட்டுமே இருப்பவர்கள் அரசியலில் இருப்பார்கள். அரசியலில் லாபம் பார்ப்பவர்கள் அரசியலை விட்டு வெளியேறுவர் அதற்கான காலம் வரும். காங்கிரஸ் கட்சியில் யாதவ் சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். உண்மைதான். இது வருத்தப்படவேண்டிய விஷயம் தான்.
அடுத்த முறை அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும். அனைவரும் கொள்கைகளை நினைத்து காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக பாடுபட வேண்டும். முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமரி அனந்தனின் 89 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது என அவர் கூறினார்.
முன்னதாக கடலூர் மாவட்டம் புவனகிரியில் முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது நான் ஊர்த்து போய் முதல்வராக பல்லியா? பாம்பா? நான் நடந்து சென்றுதான் முதல்வரானேன் என பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.