வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 22 மார்ச் 2021 (14:01 IST)

தேர்தல் 2021 பிரச்சார களம்: நாம் தமிழர் - காங்கிரஸ் வாக்குவாதம்!!

பாஜக பி டீம் என சொன்னதால் வாக்கு சேகரிப்பில் நாம் தமிழர் - காங்கிரஸிடையே வாக்குவாதம். 

 
கோவை தெற்கு தொகுதியின் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் கோட்டைமேடு பள்ளிவாசல் அருகே  தொழுகை முடித்துவாக்கு வந்தவர்களிடம் வாக்குகளை சேகரித்தார். அப்போது கை சின்னத்தில் போட்டியிடும் தனக்கு வாக்குகளை அளிக்க வேண்டுகோள் விடுத்தார். கூட்டணி கட்சியினர் அடித்த நோட்டீஸை விநியோகித்தனர். கூடவே இரு சக்கர வாகனத்திற்காக அச்சிடப்பட்ட நோட்டீஸை ஒருவர் காங்கிரஸ் கட்சிக்கு போட்டியாக வழஙகியது சிரிப்பை வரவழைத்தது. 
 
மேலும் நாம் தமிழர் கட்சியினரை பாஜக டீம் என கூறியதால், நாம் தமிழர் கட்சியினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். திமுக தான் பாஜக பி டீம் என  தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வகாப் ஆகிய  இருவரும் பிரச்சாரம் செய்தனர். காங்கிரஸ் வேட்பாளரை கூட்டணி கட்சிளின் பிரதநிதிகள் அலைகழித்தது , தங்களுக்குள்ளே வாக்கு வாதத்திலும் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.