1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 28 மார்ச் 2020 (14:02 IST)

தமிழகத்திற்கு ரூ.9 ஆயிரம் கோடி நிதி தேவை.. பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் !

சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று  இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில் சில நாட்களிக்கு முன் பிரதமர் நரேந்திரமோடி இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ( வரும் ஏப்ரல் 14 ) ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். இது அனைத்து மாநில முதல்வர்களும் இந்த ஊரடங்கு உத்தரவை கடைபிக்க வேண்டும் என மக்களுக்குகடுமையான உத்தரவிட்டுள்ளனர். அதை மாநில போலீஸாரும் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மக்களுக்கான தினமும் புதிய திட்டங்களை அறிவித்தபடியே இருக்கிறார்.

இந்நிலையில் , கொரோனா தடுப்பு பணி மற்றும் பாதிப்பை ஈடுசெய்ய தமிழகத்திற்கு ரூ.9 ஆயிரம் கோடி நிதி தேவை என  பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதிப்புகளை ஈடுசெய்ய தமிழகத்திற்கு ரூ.9000 கோடி கோரி, மாண்புமிகு பாரதப் பிரதமர்  @PMOIndia அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.