1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: திங்கள், 26 பிப்ரவரி 2024 (12:26 IST)

முத்துராமலிங்க தேவர் வடிவில் பிரதமர் நரேந்திர மோடி நமக்கு தலைவராக கிடைத்துள்ளார்! - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

PM Modi
தென் இந்திய ஃபார்வர்ட் பிளக் காட்சி சார்பாக தேசிய ஒற்றுமை தென் மண்டல மாநாடு தென்னிந்திய பார்வர்டு பிளாக்கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி தலைமையில் மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்றது


 
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஸ்ரீராமஸ்ரீனிவாசன், தென்னாடு மக்கள் கட்சி நிறுவனர் கணேச தேவர், மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் நிறுவனர் குணசேகரன், செட்டியார் பேரவையின் தலைவர் ஜெகநாத்மிஸ்ரா, கோடம்பாக்கம் ஸ்ரீ,நடிகர் ஆர் கே சுரேஷ், இவர்கள் உட்பட பல்வேறு சமுதாய அமைப்பு தலைவர்கள் கலந்து கொண்டனர்

இம்மாநாட்டில் பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்றினார்

அப்போது கூறுகையில் ;-

பழைய அரசியலெல்லாம் முடிந்து விட்டது வரும் 2024 பிறகு புது அரசியல் தொடங்கப் போகிறது. என்னுடைய லிஸ்டில் முதல் கடவுளாக இருப்பது பசும்பொன் தேவர் தான். அவர்தான் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக தேசிய முதல் தலைவர்.

முத்துராமலிங்க தேவர் வடிவில் தற்போது நமக்கு தலைவர் கிடைத்துள்ளார் அவர்தான் பிரதமர் நரேந்திர மோடி.

இந்த இருவரின் பயண பாடத்தை படித்தால் தெரியும் இருவரும் ஒரே பயணத்தில் சொல்கிறார்கள் என்று. தேவரின் நக தூசிக்கு கூட திமுகவினர் சமாக ஆக முடியாது.

annamalai

 
தேர்தல் முடிந்த பிறகு கேளுங்கள், வாக்குப்பட்டி என்னும்போது பாருங்கள் ஒரு திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்க மாட்டார்கள்.

இளைஞர்களுக்கு அவர்கள் சொந்த ஊரில் வேலை வாய்ப்பு வேண்டும். விவசாயம் வளர வேண்டும் என்பதுதான் தென் இந்தியா வாக்குகளை தீர்மானிக்க போகிறது.

தமிழகத்தின் தண்ணி கிடைக்குதோ, அரிசி கிடைக்குதோ தெரில ஆனா சந்து கடைக்கு போனா போதை பொருள் கிடைக்குது. திமுக, விடுதலை சிறுத்தை இருவரும் கொள்கை கூட்டணி என்பதற்கு பதிலாக கடத்தல் கூட்டணி என சொல்லலாம்.

தற்போது 295 வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டு பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். தேவர் வடிவில் இருக்கும் பிரதமர் மோடிக்கு வாக்களியுங்கள் என கூறினார்.