தொடர்புடைய செய்திகள்
- பள்ளியின் மீது பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு!
- முதல்வர் இல்லாமல் இயங்கும் அரசு கல்லூரிகள்.! மாணவர் சேர்க்கை பாதிப்பு..! ராமதாஸ் கண்டனம்..!!
- நள்ளிரவு முதல் வெளுத்து வாங்கும் மழை.. குளிர்ந்தது சென்னை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!
- தமிழகத்தில் இன்னொரு இடைத்தேர்தலா? லால்குடி எம்.எல்.ஏ ராஜினாமா செய்ய போவதாக தகவல்..!
- மேற்குவங்கத்தில் பயங்கர ரயில் விபத்து.. பலியானோர் எண்ணிக்கை எவ்வளவு? உதவி எண்கள் அறிவிப்பு..!
கத்தியுடன் கல்லூரிக்கு வந்த பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள்: அதிரடியாக கைது செய்த போலீஸ்..!
சென்னை பிரசிடெண்ட் கல்லூரியில் கத்தியுடன் வந்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
சென்னையில் கத்தியுடன் பிரசிடெண்ட் கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் கல்லூரிக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து புது வண்ணாரப்பேட்டை அருகே சோதனையின் போது போலீசாரிடம் அந்த மாணவர்கள் சிக்கி உள்ளனர்.
குணா(20), ஜெனகன்(19), பாலாஜி(19), இசக்கி எட்வின் பால் ஆகிய நான்கு மாணவர்களை போலீசார் கைது செய்து கத்தியுடன் கல்லூரிக்கு செல்வது ஏன் என்பது குறித்து விசாரணை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே கல்லூரி மாணவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில் தற்போது படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரிக்கு செல்லும் போது கத்தி எடுத்துச் சென்றது ஏன் என்பது குறித்தும் குற்ற செயல்கள் செய்வதற்கு அவர்கள் முயற்சி செய்தார்களா என்பது குறித்தும் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
