ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 20 ஜூன் 2024 (07:18 IST)

கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை..!

Stalin
கள்ளச்சாராய விவகாரம் குறித்து  முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சட்டப்பேரவையின் இன்றைய அலுவல் முடிந்தவுடன், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின்  ஆலோசனை செய்ய உள்ளதாகவும், இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் முத்துச்சாமி, எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் காவல்துறை மற்றும் உளவுத்துறை டிஜிபி, உள்துறை, மதுவிலக்கு, அமலாக்கத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
முன்னதாக கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. மேலும் விஷ சாராயம் குடித்தவர்களில் சிகிச்சைக்காக 94 பேர் மருத்துவமனையில் அனுமதி, அவர்களில் 5 பேர் நிலைமை கவலைக்கிடம் என்று தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி ஜிப்மரில் ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva