கேப்டன் வாயதொறந்தா பல கட்சிகள் காணாம போகும்.. தெறிக்கவிட்ட பிரேமலதா
தமிழகத்தில் கஜா புயல் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில், ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் மற்ற சில கட்சியினரும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆதரவும், உதவிகளையும் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கஜா புயலால் பெரிதும் பாதுப்புக்குள்ளான கொடைக்கானல் பகுதிக்கு சென்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா பார்வையிட்டார். மேலும், நிவாரண உதவிகளையும் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பின்வருமாறு பேட்டி அளித்தார்,
நாங்க எதிர்க்கட்சியில் இல்லை, ஆனால் புயல் பாதிப்பை நேரடியாக கேட்டு அறிகிறோம். நாகை, வேதாரண்யம், தஞ்சை என பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றோம். இப்போது கொடைக்கானலுக்கு வந்திருக்கிறோம்.
இங்கே ஆளும் கட்சியும் வரவில்லை, எதிர்க்கட்சியும் வரவில்லை. இதே தொகுதியில்தானே ஓபிஎஸ் வெற்றி பெற்றார். ஆனால் இன்னும் அவர் ஏன் இங்கே வரவில்லை?
முதல்வரும், துணை முதல்வரும் ஹெலிகாப்டரில் சுற்றுலா போய்விட்டு வந்திருக்கிறார்கள். எனவே ஹெலிகாப்டரில் போனது மக்கள் குறைகளை கேட்க அல்ல. ஜெயலலிதாவை போல் இவங்களும் ஹெலிகாப்டரில் பறக்க ஆசைபட்டு போயிருக்கிறார்கள்.
விஜயகாந்திற்கு தற்போது 2 ஆம் கட்ட சிகிச்சை நடந்து வருகிறது. விரைவில் முழு உடல் தகுதி பெற்றவுடன் மக்களை பார்க்க வருவார். அவர் பேச ஆரம்பித்தால் தற்போது உள்ள கட்சிகள் காணாமல் போய்விடும் என பேசியுள்ளார்.