விஜய்க்கு இதே பொழப்பு தான்...! வறுத்தெடுத்த பிரேமலதா விஜயகாந்த்

Last Updated: சனி, 10 நவம்பர் 2018 (16:13 IST)
விஜய்க்கு வேற வேலையே இல்லை, சர்ச்சைக்குரிய படங்களில் நடித்து அடுத்தவர்களின் பிழைப்பில் மண் அள்ளிபோடுவதையே  வேளையாக வைத்துள்ளார் என தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டிள்ளார். 
‘’சினிமாவை சினிமாவாகப் பார்க்க வேண்டும். அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மோதல்களில் ஈடுபட கூடாது. திரையுலகினர் திரைப்படங்களை சர்ச்சைக்குள் கொண்டுச்சென்று, அதன் மூலம் படத்தை ஓட்ட நினைக்கிறார்களா? என்றும் தோன்றுகிறது. ஏன் என்றால் அண்மையில் நடந்துவரும்  நடவடிக்கைகளை பார்க்கும்போது அப்படித்தான் யோசிக்க வைத்துள்ளது.
 
அடுத்தவர்களையும் சற்று யோசித்து பார்த்து விஜய் நடிக்க வேண்டும்’’ எனத் தெரிவித்து இருந்தார் பிரேமலதா. ஆனால் அவர் இப்படி பேசியதை விஜய் தரப்பினர் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். 
 
பிரேமலதாவின் இந்த கோபத்திற்கு காரணம் என்னவென்றால்,  விஜய் கட்சி ஆரம்பித்தால் அது தேமுதிகவுக்கு பின்னடைவாக இருக்கும் என்பது தானாம்.
 
 மேலும் தங்களது கட்சியைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலோனோர் விஜய் பக்கம் தாவி விடுவார்கள் எனவும் பிரேமலதா  எண்ணுகிறார் . அதனால்தான் விஜய்யை பற்றி இப்படி விமர்சித்திருக்கிறார்’’ எனக்கூறுகிறார்கள்.  


இதில் மேலும் படிக்கவும் :