செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (12:07 IST)

தேர்தலில் சோலோவாக நிற்கிறதா தேமுதிக!? – பகீர் கிளப்பும் பிரேமலதா!

இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் தேமுதிகவினர் தேர்தலில் தனித்து நிற்க விரும்புவதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் அவரது கட்சியினரால் கொண்டாடப்படுகிறது. விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தெலுங்கானா அளுநர் தமிழிசை ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் “கேப்டன் விஜயகாந்தை இனி கிங்காக பார்க்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்” என கூறியுள்ளார்.

மேலும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் விரும்புவதாக தெரிவித்துள்ள அவர், இதுகுறித்து விரைவில் கட்சி செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார்.

கூட்டணியில் உள்ள அதிமுக மாநிலங்களவை பதவியில் தேமுதிகவிற்கு வாய்ப்புகள் வழங்காத அதிருப்தியில் தேமுதிக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் முன்னதாகவே பேச்சு எழுந்திருந்த நிலையில், தற்போது பிரேமலதா இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.