செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (11:10 IST)

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற திமுக! – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

சட்டப்பேரவைக்குள் திமுக எம்.எல்.ஏக்கள் குட்கா கொண்டு சென்றதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2017ல் மு.க.ஸ்டாலின் உட்பட 21 திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை கூட்டத்திற்கு குட்கா பொருட்களை கொண்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. குட்கா பொருட்கள் எளிதில் கிடைப்பதை பேரவைக்கு தெரியப்படுத்தவே கொண்டு சென்றதாக திமுகவினர் கூறினாலும், சட்டப்பேரவையை குட்கா பொருட்கள் கொண்டு வந்து அவமதித்ததாக சபாநாயகர் பெயரில் நீதிமன்றத்தில் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

இன்று அதன் மீது விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்றம் உரிமை மீறல் நோட்டீஸில் சில குறைபாடுகள் உள்ளதாக கூறி நோட்டீஸை ரத்து செய்துள்ளது. விரிவான விளக்கத்துடன் மீண்டும் நோட்டீஸ் தாக்கல் செய்ய சபாநாயகருக்கு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் புதிதாக அளிக்கப்படும் நோட்டீஸுக்கு மனுதாரர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கலாம் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.