1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (09:53 IST)

நான் ஏன் பாஜகவில் இணைந்தேன்? – அண்ணாமலை விளக்கம்!

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று பாஜகவில் இணைய உள்ள நிலையில் பாஜகவை தேர்ந்தெடுத்தது ஏன் என விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்தவரான அண்ணாமலை கர்நாடக காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர். சமீபத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவர் தமிழக அரசியலில் ஈடுபட போகிறார் என பேசிக்கொள்ளப்பட்டது. ஆனால் அவர் தற்சார்பு விவசாயம் செய்து கொண்டு அது குறித்து பேசி வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் மோடியை ஏன் பிடிக்கும்? ரஜினியின் அரசியல் நிலைபாடு போன்றவற்றை பேசியிருந்தது, அவர் பாஜகவிலோ அல்லது ரஜினியின் கட்சியிலோ இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று பாஜகவில் இணைய உள்ளார்.

பாஜகவை தேர்ந்தெடுத்தது ஏன் என விளக்கமளித்துள்ள அவர் ‘நாடு, தேசம் என நாட்டின் மீது அக்கறை கொண்டவன் நான். அதனால்தான் ஐபிஎஸ் ஆனேன். தற்போது தமிழக அரசியலில் ஒரு மாற்றுப்பாதை தேவைப்படுகிறது, அதை பாஜகவால் மட்டுமே தர இயலும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.