பாஜகவுடன் திரைமறைவு பேச்சுவார்த்தையா? பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்..!
அதிமுக கூட்டணியில் இணைய தேமுதிக இறுதி கட்ட பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில் அக்கட்சி பாஜகவுடன் திரை மறைவாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இதற்கு தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்
வரும் பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் இன்னும் எந்த கூட்டணியில் சேர்வது என்ற முடிவெடுக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.
இரு கட்சிகளுமே அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கூட்டணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதிமுகவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் பாஜகவுடன் திரை மறைவு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வேண்டும் என்ற எங்களது உரிமையை அதிமுகவுடன் நாங்கள் கேட்டிருக்கிறோம் என்றும் பாஜகவுடன் திரை மறைவாக பேச்சுவார்த்தை எழுதும் நடத்தவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். மேலும் தேமுதிக நிலைப்பாட்டையும் முடிவையும் விரைவில் அறிவிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்
Edited by Mahendran