ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 8 மார்ச் 2024 (16:21 IST)

கடந்த முறை சுயேட்சையாக வெற்றி.. இந்த முறை பாஜக ஆதரவுடன் போட்டியா? நடிகையின் திட்டம்..!

கடந்த முறை சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகை இந்த முறை பாஜக சார்பில் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் மனைவி சுமலதா கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் சுயேட்சையாக மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் மீண்டும் அதே தொகுதியில் அவர் போட்டியிட திட்டமிட்டு இருந்த நிலையில் காங்கிரஸ் கட்சி அவரை தங்கள் பக்கம் இழுக்க தீவிர முயற்சி செய்தது.

ஆனால் சுமலதா பாஜக ஆதரவாளராக மாறியுள்ள நிலையில் அவர் இந்த முறை பாஜக சார்பில் அதே தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் டெல்லி சென்ற சுமலதா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாகவும் சில முக்கிய ஆலோசனைகள் பெற்றதாகவும் கூறப்படுகிறது

ஏற்கனவே அவருக்கு கன்னட நடிகர் யஷ் உள்பட பலர் ஆதரவளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை சுமலதா, கணவர் இறந்ததால் அனுதாப வாக்குகள் மூலம் வெற்றி அடைந்தார் என்றும் இந்த முறை சுயேட்சையாக வெற்றி அடைய வாய்ப்பு இல்லை என்பதால் அவர் பாஜக ஆதரவுடன் போட்டியிட உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva