திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 10 ஜனவரி 2021 (15:22 IST)

நாங்க கூட்டணி அமைச்சாதான் ஆட்சி.. நாங்க ராசியான கட்சி! – பிரேமலதா விஜயகாந்த்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேமுதிக கூட்டணி வைக்கும் கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியல் பணிகளில் களம் இறங்கியுள்ளன. இந்நிலையில் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் அதிமுகவோடு கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளான தேமுதிக, பாமக போன்றவற்றின் முடிவு குறித்து இன்னும் தெரிய வரவில்லை.

இந்நிலையில் கூட்டணி குறித்து பேசியுள்ள பிரேமலதா விஜயகாந்த் “முதன்முறையாக அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்தபோது அதிமுக வென்றது. அதேபோல பாஜகவும் தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததால் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது. எதிர்வரும் தேர்தலிலும் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிதான் ஆட்சியமைக்கும்” என பேசியுள்ளார்.