தை பிறந்தாலும்.. எது பிறந்தாலும்.. திமுகவுக்கு வழி பிறக்காது! – அமைச்சர் உதயகுமார் கலாய்!

Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 10 ஜனவரி 2021 (15:03 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக என்ன முயன்றாலும் அவர்களுக்கு வழி பிறக்காது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன, இந்நிலையில் பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘தை பிறந்ததும் திமுகவிற்கு வழி பிறக்கும்’ என பேசியுள்ளார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலினின் இந்த கருத்து குறித்து கிண்டலாக பேசிய அமைச்சர் உதயகுமார் “தை மட்டுமல்ல.. பங்குனி, மாசி எல்லா மாதமும் பிறந்தால் கூட திமுக ஆட்சிக்கு வராது. ஸ்டாலினுக்கு எந்த வழியும் பிறக்காது” என பேசியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :