1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu districts had more rain following hours

அடுத்த 24 மணி நேரத்தில் அடை மழை! – 10 மாவட்டங்களுக்கு அலர்ட்!

Tamilnadu
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குளிர்காலம் தொடங்கி சில நாட்கள் ஆகிவிட்ட நிலையில் தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. டெல்டா பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அறுவடை பயிர்கள் அழுகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர், திருநெல்வேலி, புதுக்கோட்டை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஒழுங்கா காட்டுக்குள்ள போ.. இல்லைனா! – காட்டுயானையை பேசியே திருப்பியனுப்பிய ஊழியர்!