விஜயகாந்துக்கு ஒரு சான்ஸ் தந்தீங்களா? குத்தி காட்டும் பிரேமலதா!!

Sugapriya Prakash| Last Modified வியாழன், 13 பிப்ரவரி 2020 (12:08 IST)
மக்கள் விஜயகாந்த்திற்கு ஒரு வாப்பு கொடுத்தார்களா என கேள்வி எழுப்பியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த். 
 
தேமுதிகவின் 20 ஆம் ஆண்டு கொடி நாள் விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், கட்சியின் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் பிரேமலதா பேசியதாவது... 
 
இந்தியாவில் எத்தனையோ மாநிலங்களில் எத்தனையோ முதல்வர்கள் வந்துகொண்டிருக்கின்றனர்.அவர்கள் எல்லாம் விஜயகாந்த் பாலிசியைத்தான் கடைபிடிக்கின்றனர். விஜயகாந்த் மக்களுக்காக ஆயிரக்கணக்கான திட்டங்களை கொடுத்திருப்பார். ஆனால் மக்கள் நீங்க அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தீர்களா? 
 
நாலாபுறமும் உள்ள சூழ்ச்சி, துரோகத்திற்கு மத்தியில் தேமுதிக வெற்றி நடைபோடுகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதல்வராக வந்தால் இந்தியாவில் தமிழகத்தை வல்லரசு நாடாக மாற்றுவார். அதேபோல் கூட்டணி தர்மத்தை கடைபிடிப்பவர் விஜயகாந்த். இதேபோல அனைத்து கட்சிகளும் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் என கோருகிறேன் என பேசினார். 


இதில் மேலும் படிக்கவும் :