புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : ஞாயிறு, 24 பிப்ரவரி 2019 (15:46 IST)

விஜயகாந்த் - ரஜினி, ஸ்டாலின் சந்திப்பில் அரசியல்... போட்டுடைத்த பிரேமலதா

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலினுக்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். 
 
வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு விநியோகத்தை பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியது பின்வருமாறு...
 
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் 3-வது அணி கிடையாது. தேமுதிக பலத்துக்கு தகுந்தாற் போல் தொகுதிகள் வேண்டும். விஜயகாந்தின் நலம் குறித்து விசாரித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி.
மேலும் விஜயகாந்தை ரஜினிகாந்த், ஸ்டாலின் சந்தித்ததில் நலம் விசாரிப்பு மட்டுமல்ல அனைத்தும் பேசப்பட்டுள்ளது. எந்த கட்சியுடன் கூட்டணி என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. விஜயகாந்த் உரிய முடிவை அறிவிப்பார்.
 
தேமுதிகவிற்கு கிடைக்கும் இடங்களை பொறுத்து கூட்டணி முடிவு இருக்கும். ஒரு கட்சியை விமர்சித்ததால், அந்த கட்சியுடன் கூட்டணி கிடையாது என்பது இல்லை. அரசியலுக்கு என்று ஒரு வியூகம் உள்ளதாக குறிப்பிட்ட பிரேமலதா, கடந்த ஒரு தேர்தலை மட்டும் வைத்து தேமுதிகவின் பலத்தை கணித்து விடக்கூடாது எனவும் பேசினார்.