செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 23 பிப்ரவரி 2019 (17:24 IST)

ரஜினி ரசிகர்களின் கதி இதுதான்: அதிமுக அமைச்சர் அசால்ட் பேச்சு

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிகள், தொகுதி பங்கீடுகள் என அனைத்தும் படு ஜோராய் நடந்து வருகிறது. அதிமுக, திமுக கட்சிகள் தங்களது கூட்டணிகளை கிட்டதட்ட உறுதி செய்துவிட்டன. 
 
கமலின் தற்போதைய நிலைபாடு தனித்து போட்டியிடுவது. ஆனால், ரஜினிகாந்த இந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்க போவதில்லை என தெரிவித்தார். 
 
மேலும், தமிழகத்தின் முக்கிய பிரச்சனை தண்ணீர் தட்டுப்பாடு. அதற்கு தீர்வு கொடுக்கும் கட்சியை மக்கள் ஆய்வு செய்து வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். 
இந்நிலையில் இது குறித்து பேட்டி அளித்த அதிமுக அமைச்சர் பாண்டியராஜன், ரஜினி தண்ணீர் கொடுக்கும் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார். தண்ணீர் கொடுக்கக்கூடிய நிலையில் உள்ள ஒரே கட்சி நாங்கள்தான். 
 
அதற்கு என்ன முயற்சிகள் எடுத்துள்ளோம் என்பது குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெளிவாக சட்டப்பேரவையில் கூறியுள்ளார். ஆகவே ரஜினிகாந்த் அளித்த அறிக்கையின்படி ரஜினியின் ரசிகர்கள் கண்டிப்பாக அதிமுக கூட்டணிக்குத்தான் வாக்களிப்பார்கள். அதைவிட வேறு வழியே இல்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி அளித்தார்.