1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Premalatha says vijayakanth will campaint in election

தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்தை பார்க்கலாம்: பிரேமலதா!

தேமுதிக
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடப்பதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன
 
ஒரு பக்கம் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் அதிமுகவும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த முறை கூட்டணி கட்சிகள் இடம் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக கூட்டணி நிலைப்பாடு குறித்து ஜனவரி முதல் வாரத்தில் செயற்குழு கூட்டத்தில் விஜயகாந்த் அறிவிப்பார் என்று கூறினார். மேலும் தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்தை கண்டிப்பாக தொண்டர்கள் பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்
அடுத்த கட்டுரையில்
நைட் டுயூட்டி கேட்டது இதுக்குத்தானா?; கேட்டு வாங்கிய ஏட்டு! பல வீடுகளில் திருட்டு!