1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 6 நவம்பர் 2020 (11:33 IST)

நைட் டுயூட்டி கேட்டது இதுக்குத்தானா?; கேட்டு வாங்கிய ஏட்டு! பல வீடுகளில் திருட்டு!

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவதாக கூறி பல வீடுகளில் கொள்ளையடித்த போலீஸ் ஏட்டு பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூரை சேர்ந்த கற்குவேல் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு காவலர் தேர்வு எழுதி ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணி ஏற்றுள்ளார். இந்நிலையில் பணியில் சேர்ந்தது முதல் இரவு ரோந்து பணிகளை ஆர்வமுடன் கேட்டு வாங்கி செய்து வந்துள்ளார். ஆனாலும் பல பகுதிகளில் இரவு நேரங்களில் திருட்டு சம்பவம் அதிகரித்து வந்துள்ளது.

சமீபத்தில் திருநெல்வேலி பெருமாள்புரத்தில் நடைபெற்ற திருட்டு ஒன்றில் கைரேகைகளை ஆய்வு செய்த போது அதில் ஒன்று ஏட்டு கற்குவேல் உடையது என தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து கற்குவேலை விசாரித்ததில் கடந்த சில ஆண்டுகளில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தனது கூட்டாளிகளோடு இரவு நேரங்களில் ரோந்து என்ற பெயரில் கொள்ளையடித்து வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கற்குவேலை கைது செய்துள்ள போலீஸார் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.