1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. premalatha says about neet exam

நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்கிறது: பிரேமலதா குற்றச்சாட்டு

நீட் தேர்வு
நீட் தேர்வை  வைத்து திமுக அரசியல் செய்கிறது என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டுமென பாஜக தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்தாலும் நீட் தேர்வு இதுவரை ரத்து செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மையாக உள்ளது
 
இந்த நிலையில் நீட்தேர்வை ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்வோம் என்று கூறிய திமுக நீட் தேர்வை வைத்து அரசியல் மட்டுமே செய்கிறது என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய அந்த கட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார் 
 
மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாகவும் இந்த தேர்தலில் கேப்டனை மக்களை ஏமாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் விரைவில் தெரிவித்தார்
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
பாஜக தோற்றால் உத்தரப்பிரதேசம் கேரளா போல ஆகும் என்று பேசிய யோகி ஆதித்யநாத்: பினராயின் பதில் என்ன?