வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 28 ஜனவரி 2024 (12:46 IST)

முதல்முறையாக கொடியேற்றிய பிரேமலதா.. அறுந்து விழுந்ததால் அபசகுணம் என விமர்சனம்..!

தேமுதிக பொதுச்செயலாளராக சமீபத்தில் பிரேமலதா பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் அவர் பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பின் முதல் முதலாக கட்சி கொடியை ஏற்றிய நிலையில் அந்த கொடி இன்று அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா பதவி ஏற்றுக்கொண்ட சில நாட்களில் விஜயகாந்த் காலமானார். இதனை அடுத்து அவரது மறைவு குறித்த காரியங்கள் அனைத்து முடிந்த நிலையில் தற்போது மீண்டும் பிரேமலதா அரசியலில் சுறுசுறுப்பாகியுள்ளார் 
 
அவர் இன்று கட்சி கொடியை ஏற்றிய நிலையில் கட்சி கொடி பாதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென அறுந்து விழுந்தது. தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா பதவியேற்றாவுடன் முதல்முறையாக கொடியேற்றிய   நிலையில் அது பாதியிலேயே அறுந்து விழுந்தது அபசகுணமாக பார்க்கப்படுவதாக கட்சி தொண்டர்கள் கருதுகின்றனர்.
 
Edited by Mahendran