1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 14 ஜூலை 2022 (13:57 IST)

இந்த நாடு எங்கே செல்கிறது? நடிகர் பிரகாஷ்ராஜ் ட்வீட்

prakashraj
இந்த நாடு எங்கே செல்கிறது என கேள்வி எழுப்பி நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 
 
சமீபத்தில் பிரதமர் மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தேசிய சின்னத்தை திறந்து வைத்தார்/ இந்த சின்னத்தின் புகைப்படத்தை தனது சின்னத்தில் பதிவு செய்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த நாடு எங்கே செல்கிறது என்று குறிப்பிட்டு உள்ளார்
 
பிரதமர் மோடியின் ஆட்சிக்கு முன் ராமர், ஹனுமான் மற்றும் தேசிய சின்னம் புகைப்படங்களை பதிவு செய்த அவர் தற்போது இருக்கும் ராமர், ஹனுமான் மற்றும் தேசிய சின்னத்தை பதிவு செய்து இந்த நாடு எங்கே செல்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார் 
 
நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில ஆண்டுகளாக பாஜக எதிர்ப்பு கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் என்பது தெரிந்ததே.