செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 13 ஜூலை 2022 (11:55 IST)

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் சுப்ரமணியன் சாமி மனு தாக்கல்

subramaniya swamy
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையே ராமர் பாலம் ராமாயணம் காலத்தில் கட்டப்பட்டது என்று வரலாற்று புராணம் கூறுகிறது 
 
இந்த நிலையில் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக்க வேண்டும் என பாஜக எம்பி சுப்பிரமணியன் சாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்
 
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியானது
 
சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனு ஜூலை 26ஆம் தேதி விசாரிக்கப்பட உள்ள நிலையில் ராமர் பாலம் தேசிய சின்னமாக மாற்றப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்