சென்னையில் இதே வேகத்தில் கொரோனா பரவினால்... சுகாதார நிபுணர் எச்சரிக்கை

Corona virus
சென்னையில் இதே வேகத்தில் கொரோனா பரவினால்
siva| Last Updated: திங்கள், 12 ஏப்ரல் 2021 (21:11 IST)
சென்னையில் தினமும் 2 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு புதிதாக ஏற்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் படுக்கைகள் மிக வேகமாக நிரம்பி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இரண்டாயிரத்துக்கு குறைவானவர்கள் மட்டுமே டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாகவும் ஆனால் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர்களுக்கு கொரோனா புதிதாக பாதிக்கப்பட்டிருந்தால் ஓமந்தூரார் மருத்துவமனை உள்பட பல மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் சுகாதார நிபுணர் பிரதீப் கவுர் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார் சென்னையில் வேகமாக பரவி வருவதால் பரவிவருகிறது. இரண்டாவது அலையில் சென்னையில் தினசரி 2000 பேர் பாதிப்படைந்து வருகின்றனர். இதே வேகத்தில் பரவினால் வெண்டிலேட்டர் வேண்டிய தேவை அதிகரிக்கும் என்றும் உயிரிழப்பும் அதிகமாகும் என்றும் எனவே பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்


இதில் மேலும் படிக்கவும் :