செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 12 ஏப்ரல் 2021 (18:26 IST)

கொரோனா ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் கூறியது என்ன?

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முக்கிய கூட்டம் ஒன்றைக் கூட்டினார்.
 
தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மூத்த அமைச்சர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியபோது ’ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரில் சென்று நானே ஆய்வு நடத்தினேன். தற்போது தமிழகத்தில் படிப்படியாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது
 
கபசுரக் குடிநீர் இரு வேளைகளிலும் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு பல நடவடிக்கைகள் எடுத்து கொரோனாவை கட்டுக்குள் வைத்தோம். ஒருங்கிணைப்பு குழு மற்றும் மருத்துவ வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர்களுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தினோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்