12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் - அன்பில் மகேஷ்
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை முன்னர் நடந்த போதே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்றும் அந்த தேர்வு ஒத்திவைக்கப்படுமே தவிர ரத்து செய்யப்படாது என்றும் உறுதியாகக் கூறினார்.
இந்நிலையில் தற்போது இதே கருத்தையே அவர் முன்வைத்துள்ளார். தனது சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது, ஆல் பாஸ் என்பதை விட மாணவர்களின் எதிர்கால நலனே முக்கியம். இன்றைய சூழ்நிலையில் தேர்வு கட்டாயம்.
ஆல் பாஸ் என அறிவித்தால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து அரசை பாராட்டுவர். ஆனால் அது எங்களுக்கு தேவையில்லை என அவர் கூறியுள்ளார். இதனால் அதிமுக அரசை போல திமுக அரசு தேர்வுகளை ரத்து செய்யாது என தெரிகிறது.