வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 பிப்ரவரி 2023 (14:05 IST)

பிரதமர் மோடி அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் போப்பாண்டவர் !

modi pope
பிரதமர் மோடி அழைப்பை ஏற்று போப்பாண்டவர் இந்தியா வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா வந்த பிறகு போப்பாண்டவர் தற்போது தான் இந்தியாவுக்கு அவர் வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்தவ சமய போதகராக இருக்கும் போப்பாண்டவர் உலகம் முழுவதும் பிரபலம் என்பதும் உலகில் பல நாடுகளுக்கும் அவர் சுற்றுப்பயணம் செய்வார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் கிறிஸ்துவ மத தலைவர்களில் முதன்மையான போப்பாண்டவர் அடுத்த ஆண்டு இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடி, போப்பாண்டவர் இந்தியாவுக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்தார் 
 
இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட போப்பாண்டவர் அடுத்த வருடம் இந்தியா வர இருப்பதாகவும் அவர் இந்தியா வர இருக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு போப்பாண்டவர் இந்தியா வர இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran