வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 6 பிப்ரவரி 2023 (07:40 IST)

21 மாநிலங்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை: மத்திய சுகாதாரத்துறை..!

corona
இந்தியாவில் உள்ள 21 மாநிலங்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
 
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது என்பதும் கொரோனா பாதிப்பால் பொருளாதாரமே ஆட்டம் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் 21 மாநிலங்களில் அதாவது ஆந்திரா, ராஜஸ்தான், குஜராத், சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், அசாம், உத்தரகாண்ட், ஜார்கண்ட், கோவா, மிசோரம், மணிப்பூர், திரிபுரா, சண்டிகார், மேகாலயா, அருணாசலபிரதேசம், சிக்கிம், நாகாலாந்து, லடாக், தத்ரா நகர் ஹவேலி டாமன் டையு, லட்சத்தீவு, அந்தமான் ஆகிய பகுதிகளில் ஒருவர் கூட கொரோனா பாதிப்பால் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 
நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 1817 பேர் மட்டுமே கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் நேற்று ஒரே நாளில் 88 பேர் குணமாகி வீடு திரும்பியதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனாவால் உயிர் பலி இல்லை என்றும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது
 
Edited by Siva