1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. poondy lake opened for extra water

பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு!

பூண்டி
சென்னை பூண்டி ஏரியில் உபரி நீர் திறப்பு அதிகரித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னையில் நேற்று இரவு முதல் அதிமுக கனமழை பெய்து வருவதால் காரணமாக சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனையடுத்து சென்னையில் உள்ள ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று உபரிநீர் திறக்கப்பட உள்ள நிலையில் பூண்டி ஏரியில் நீர் திறக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்க படுவதாகவும் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
 
செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் சென்னையில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேதா படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்!