கமல் படத்தின் வாய்ப்பை மறுத்த நகைச்சுவை நடிகர்… ஏன் தெரியுமா?

Last Modified செவ்வாய், 2 மார்ச் 2021 (19:42 IST)

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான விவேக் தெனாலி படத்தில் நடிக்க மறுத்துள்ளாராம்.

தமிழ் சினிமாவின் கலைஞாணி நடிகர் கமல்ஹாசன் என்றால் நகைச்சுவையில் சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்படுபவர் விவேக். ஆனால் இவர்கள் இருவரும் ஒரு படத்தில் கூட சேர்ந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர்கள் இந்தியன் 2 படத்தில் சேர்ந்து நடித்தாலும் அந்த படம் குறிப்பிடத்தகுந்த எந்த அப்டேட்டும் இல்லை.

இந்நிலையில் 2000 ஆம் ஆண்டே கமல் நடிப்பில் உருவான தெனாலி படத்தில் மதன் பாப் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் விவேக்கே நடிக்க இருந்தாராம். ஆனால் அந்த கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லை என்பதால் விலகிக்கொண்டாராம். இதை அந்த படத்தின் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :